சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் மக்களைத் தனிமைப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என் பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

அவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும்.

Leave a comment

Minimum 4 characters